search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயாறப்பர் கோவில்"

    திருவையாறில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    தஞ்சையை அடுத்த திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாள் நிகழ்ச்சியான 14-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையை சுற்றியுள்ள 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு ஐயாறப்பர் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து சப்தஸ்தான பெருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும்் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவில் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் பல்லக்குகள் சங்கமித்தன. காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

    நேற்றுகாலை 7 ஊர் பல்லக்குகளும் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டு திருவையாறுக்கு நேற்றுமாலை வந்தன. அங்குள்ள வீதிகளில் 7 ஊர் பல்லக்குகளும் உலா வந்து திருவையாறு தேரடியை வந்தடைந்தன. பின்னர் அங்கு ஐயாறப்பர் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மாலை 6.50 மணிக்கு தொடங்கியது. பல்லக்கு அருகில் பொம்மை வந்தபோது பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு 7.10 மணிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு சென்றன. இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
    திருவையாறில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய 7 ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் 7 ஊர்களில் இருந்து வந்த சாமி பல்லக்குகள் சங்கமிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    அதேபோல திருச்சோற்றுத்துறையில் உள்ள அன்னபூரணி உடனாகிய ஓதனவனேஸ்வரர் கோவிலிலும் சப்தஸ்தான திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நேற்று நடந்தது. இந்த கோவில் மூவரால் பாடல் பெற்ற தலம் ஆகும். இங்கு ஆறுமுகம், 12 கைகளுடன், 8 அடி உயரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் சப்தஸ்தான திருவிழாவுடன் தொடர்புடைய கோவில்களுள் 3-வது கோவிலாகும். சப்தஸ்தான திருவிழாவையொட்டி இந்த கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் நேற்று சாமி புறப்பாடானது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நடந்த அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், நாகை நீதிபதி மணிகண்டராஜா, மன்னார்குடி நீதிபதி சோமசுந்தரம், திருவையாறு ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் இளங்கோவன், பரம்பரை டிரஸ்டி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சப்தஸ்தான திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் ஏழூர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் சங்கமித்து, சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாமி பல்லக்குகள் 6 ஊர் திரும்பும் உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கொடி கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 14-ந் தேதி தன்னைத்தான் பூஜித்தல், மகேஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 18-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 21-ந் தேதி சப்தஸ்தான திருவிழா நடக்கிறது. அன்று ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந் தேதி ஐயாறப்பர் கோவில் உள்பட 7 கோவில்களில் இருந்து சாமி பல்லக்குகள் திருவையாறு தேரடியில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    அதை தொடர்ந்து 14-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சியும், 18-ந் தேதி தேரோட்டமும், 21-ந் தேதி சப்தஸ்தான பெருவிழாவும் நடைபெறுகிறது. சப்தஸ்தான விழாவையொட்டி காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர்் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

    22-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பல்லக்குகள் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றடையும். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.
    திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

    தெப்பத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் அமர்ந்து 5 சுற்றுகள் வலம் வந்த பிறகு குளத்தின் நடுமண்டபத்தில் சாமியை இறக்கி வைத்து ஊஞ்சலில் வைத்து ஆராட்டி தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். இதில் ஐயாறப்பர் எழுந்தருளும் பெரியதேர் மிகவும் பழமையானதாகவும் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு பழுதடைந்த பெரிய தேருக்கு பதிலாக புதிய தேர் கட்ட தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டு 17¾ அடி உயரம் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பெரிய தேர் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவுற்றுள்ளது.

    இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்குமேல் பூர்ணாகுதி மற்றும் தீபாராதணை நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் புனித நீர் நிறைந்த கடம் புறப்பாடும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்று திருதேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்கள்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தருமையாதீன உத்திரவுப்படி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×